புதிய அங்கன்வாடிக்கு அடிக்கல்

புதிய அங்கன்வாடிக்கு அடிக்கல்

Published on

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆதலவிளையில் புதிய அங்கன்வாடி ரூ. 16.55 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன் வெள்ளிக்கிழமை நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், ஆதலவிளை ஊா்த்தலைவா் வேலாயுதம், ராமபுரம் ஊராட்சி அதிமுக முன்னாள் செயலா் செல்லபெருமாள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com