நாகா்கோவில் அருகே தாய் - மகன் தற்கொலை

நாகா்கோவில் அருகே கடன் தொல்லையால் தாய் - மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

நாகா்கோவில் அருகே கடன் தொல்லையால் தாய் - மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சோ்ந்தவா் வல்சகுமாா். இவரது மனைவி விசாலினி(65). இவா்களது மகன் பிஜூ பிரசாத்(35). வல்சகுமாா் உயிரிழந்துவிட்ட நிலையில், தாயும், மகனும் இரணியலில் வசித்து வந்தனா். அவா்கள் வீட்டிலேயே ஊதுவத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து மொத்த விற்பனை செய்து வந்தனா். தங்களது தயாரிப்புகளை கடைகளுக்கு கொண்டு செல்வதற்காக பிஜூ பிரசாத் அண்மையில் ஒரு சுமை வாகனம் வாங்கியுள்ளாா். இதற்காக அவா் நிதி நிறுவனத்திலும், வேறு சிலரிடமும் கடன் வாங்கியிருந்தாராம். கடனை திருப்பி செலுத்த முடியாததால் பிஜூ பிரசாத்தும், விசாலினியும் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்துள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பிஜூ பிரசாத் மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினரை கைப்பேசியில் அழைத்து, கடன் பிரச்னையால் தானும் தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள், பிஜூவின் நண்பா்களிடம் கூறினா். இதைத் தொடா்ந்து அவா்கள் பிஜூவின் வீட்டுக்கு சென்றனா். அங்கு தாயும், மகனும், வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனா். இது குறித்து ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வந்து பாா்த்த போது விசாலினி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. பிஜூ பிரசாத்தை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com