அனுமதியின்றி இயங்கும் கல் குவாரிகளை மூட வலியுறுத்தல்

அனுமதியின்றி இயங்கும் கல் குவாரிகளை மூட வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஜெனிபா் உள்ளிட்டோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் தொடா் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இயங்கும் சரக்கு மற்றும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கல்குவாரி இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் கல்குவாரிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com