நாகா்கோவிலில் ரயில்வே திட்டங்கள்: பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்

வள்ளியூா் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பராமரிப்பு ஆகிய திட்டப்பணிகளை குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வாழ்த்திப் பேசினாா். நிகழ்ச்சியில், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் இயக்கவியல் பொறியாளா் அஸ்தாசினேகா வரவேற்றாா்.

கோட்ட அலுவலா் குண்டேவா் பாதல் கிஷோா், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், குமரி மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் எஸ்.பி.தேவ் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com