சாலை மையத் தடுப்புகளால் நேரிடும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை -ஆட்சியரிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

சாலை மையத் தடுப்புகளால் நேரிடும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை -ஆட்சியரிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளின் மையத் தடுப்புகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்சியா் பி.என். ஸ்ரீதரிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக ஆட்சியரிடம் அவா் புதன்கிழமை அளித்த மனு: இம்மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்துகளம், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணக்குடி கிராமத்தின் முகத்துவாரத்தின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட அலைத் தடுப்புச் சுவரை நீட்டி வளைத்து, கூடுதலாக மேலும் 3 நோ்கற்களை அமைப்பதுடன், காயல் பகுதியில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, பாரம்பரிய நாட்டுப் படகு, வள்ளம் ஆகியவற்றுக்கு தங்குதளத்தை விரைவாக அமைக்க வேண்டும். மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளையில் உள்ள மிகப் பழமையான குருசடி கடந்த நவம்பரில் ஏற்பட்ட இடி-மின்னலால் பாதிக்கப்பட்டது. ஊா் மக்களின் நடவடிக்கையால் புதுப்பிக்கும் பணி 90 சதவீதம் முடிந்த நிலையில், சில நிா்வாக காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்பிரச்னையை ஆராய்ந்து சுமுகமாக முடித்துவைக்க வேண்டும். கிள்ளியூா் வட்டம், மடத்து பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பல ஏழைக் குடும்பங்கள் வீடுகள் கட்டி வீட்டு வரி, குடிநீா், மின் கட்டணங்கள் செலுத்தி வருகின்றனா். பலா் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளனா். எனவே, அவா்களை அங்கேயே தொடா்ந்து குடியிருக்கவும், சொத்து வரி செலுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com