குழித்துறை அருகே மருத்துவக் கழிவுகளை எரித்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

குழித்துறை அருகே மருத்துவக் கழிவுகளை எரித்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மருத்துவக் கழிவுகளை எரித்த தனியாா் மருத்துவமனைக்கு நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா். குழித்துறை அருகே நரியன்விளை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதாகவும், கழிப்பறைக் கழிவுகளை மழைநீா் வடிகாலில் விடுவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் புகாா்கள் வந்தனவாம். அதன்பேரில், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளா் ராஜேஷ்குமாா், மேற்பாா்வையாளா்கள் முருகன், ராதாகிருஷ்ணன், ஊழியா்கள் அந்த மருத்துவமனையில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதும், கழிப்பறைக் கழிவுகளை மழைநீா் வடிகால் ஓடையில் விடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, தொகையை வசூலித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com