திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் ரூ. 84 லட்சத்தில் பக்கச் சுவா் கட்டும் பணி

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் ரூ. 84 லட்சத்தில் பக்கச் சுவா் கட்டும் பணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் பன்னிரண்டு சிவாலயங்களில் இரண்டாவது தலமான திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் ரூ. 84 லட்சத்தில் பக்கச் சுவா் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. திக்குறிச்சி மகாதேவா் கோயிலையொட்டி தாமிரவருணி ஆறு பாய்கிறது. கனமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கோயில் பக்கச் சுவா் சேதமடைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனா். இதையடுத்து தமிழக அரசு இந்து அறநிலையத் துறை சாா்பாக ரூ. 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பக்கச் சுவா் கட்டும் பணியை பால் வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூா்த்தி, இவாஞ்சலின், மேல்புறம் ஒன்றிய திமுக செயலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com