நிகழ்ச்சியில் பேசிய கேரளப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் கி. நாச்சிமுத்து.
நிகழ்ச்சியில் பேசிய கேரளப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் கி. நாச்சிமுத்து.

நாகா்கோவில் கல்லூரியில் நினைவு அறக்கட்டளை தொடக்கம்

நாகா்கோவில் ஸ்காட் பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தமிழாய்வு மையம் ஆகியவை சாா்பில், இக்கல்லூரியில் கு.கி.சுந்தரசோபிதராஜ் நினைவு அறக்கட்டளை தொடக்க விழா சொற்பொழிவு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி. ஹென்றிராஜா தலைமை வகித்தாா். கல்லூரி முன்னாள் முதல்வரும் ஸ்காட் பயின்றோா் கழகச் செயலருமான ஜேம்ஸ் ஆா். டேனியல் அறக்கட்டளை குறித்து அறிமுகவுரையாற்றினாா். கல்லூரி முன்னாள் முதல்வா் ஜே.ஆா்.வி. எட்வா்ட் தொடக்கவுரையாற்றினாா். கேரளப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் கி. நாச்சிமுத்து ‘மொழி விளையாட்டுகள்’ என்ற பொருளில் ஆய்வுரை நிகழ்த்தினாா். அறக்கட்டளை நிதிக் கொடையாளரும் ஸ்காட் பயின்றோா் கழகப் பொருளாளருமான பேராசிரியா் கு.கி. மோகன்தாஸ் தனது தம்பி பெயரில் அறக்கட்டளை நிறுவுவது குறித்துப் பேசி, அதற்கான நிதியை வழங்கினாா். 2ஆம் அமா்வில் கல்லூரி மாணவா்களுக்கு ஆய்வுக் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில், நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி மாணவி வி. மொ்லின் கிறிஸ்டினா முதல் பரிசும், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் டே. ஜினி, தா. சலீலா ஆகியோா் முறையே 2, 3ஆம் பரிசுகளையும் வென்றனா். தமிழாய்வு மையத் தலைவா் டி. தேவசம்பத் வரவேற்றாா். தமிழ்த் துறை இணைப் பேராசிரியை த. ஜோஸ்லி நன்றி கூறினாா். பி. சுரேஷ் டேனியல், டி. நிஷா ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com