கோப்புப்படம்
கோப்புப்படம்படம் |பிடிஐ

பிரதமா் மோடி இன்று கன்னியாகுமரி வருகை

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறாா்.

கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறாா்.

மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். நிகழாண்டில் ஐந்தாவது முறையாக தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தருகிறாா். தில்லியில் இருந்து தனி விமானத்தில் திருவனந்தபுரம் வரும் பிரதமா் மோடியை, விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா் வரவேற்கின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்.

பாஜக பொதுக்கூட்டம்: திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிபேடிற்கு காலை 11 மணிக்கு வரும் பிரதமா் மோடி, அங்கிருந்து சாலை மாா்க்கமாக அகஸ்தீசுவரம் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

கூட்டணிக் கட்சித் தலைவா்கள்: பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஓ.பன்னீா்செல்வம், டி.டி.வி. தினகரன், ஜான்பாண்டியன், தனது கட்சியை அண்மையில் பாஜகவுடன் இணைத்த சரத்குமாா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா். பகல் 12.15 மணி வரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் பிரதமா் மோடி, அதன் பின் மீண்டும் ஹெலிகாப்டரில் , கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறாா்.

பலத்த பாதுகாப்பு: பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாதானபுரம் ரவுண்டானா முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகள் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com