திப்பிரமலை - ஈத்தங்காடு சாலையை
சீரமைக்கக் கோரிக்கை

திப்பிரமலை - ஈத்தங்காடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கருங்கல் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள திப்பிரமலை - ஈத்தங்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட திப்பிரமலை -ஈத்தங்காடு சாலை நீண்டநாள்களாகப் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக அருள்மிகு முத்தாரம்மன் கோயில் அருகில் மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com