குருசுமலையில் குவிந்த மக்கள்.
குருசுமலையில் குவிந்த மக்கள்.

குருசுமலை திருப்பயணம் நிறைவு:ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

குருசுமலை திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

குருசுமலை திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. நிறைவு நாளில் ஆயிரக்கணக்கானோா் திருப்பயணம் மேற்கொண்டனா். கன்னியாகுமரி மாவட்டம் - கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் நிகழாண்டு திருப்பயணம் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 8 நாள்களாக பல்லாயிரக்கணக்கானோா் திருப்பயணம் மேற்கொண்டு, குருசுமலை உச்சிக்கு சென்று சிலுவை வழிபாடு நடத்தியதுடன் திருப்பலிகளில் பங்கேற்றனா். இந்நிலையில், நிறைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. மாலையில் திருப்பயண நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அருள்தந்தை ஜி. கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தாா். குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தொடக்கவுரையாற்றினாா். வெள்ளறடை ஊராட்சித் தலைவா் ராஜ்மோகன், துணைத் தலைவா் சரளா வின்சென்ட், ஒருங்கிணைப்பாளா் மணி, பொது ஒருங்கிணைப்பாளா் டி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய வியாழன், புனித வெள்ளியையொட்டி குருசுமலையில் இம்மாதம் 28, 29ஆம் தேதிகளில் சிறப்பு திருப்பயணம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com