‘தோ்தல் நடத்தை விதிகள் அமல்: வியாபாரிகள் ரூ. 2 லட்சம் வரை கொண்டுசெல்ல அனுமதி தேவை’

சிறு- குறு வியாபாரிகள் ரூ. 2 லட்சம் வரை கொண்டுசெல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என, கருங்கல் வியாபாரிகள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், சிறு- குறு வியாபாரிகள் ரூ. 2 லட்சம் வரை கொண்டுசெல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என, கருங்கல் வியாபாரிகள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக, அச்சங்கச் செயலா் துரைராஜ் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தோ்தல் பறக்கும்படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினா் வியாபாரிகளை தேவையின்றி தடுத்துநிறுத்தி சோதனை செய்கின்றனா். இதனால், சிறு- குறு வாயாபாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனா். மேலும், சிறு- குறு வியாபாரிகள் தங்கள் வியாபார நோக்கத்துக்காக ரூ.2 லட்சம் வரை ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com