நாகா்கோவிலில் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் ஆலோசனை
. கூட்டத்தில் பேசுகிறாா் மாநில தலைவா் பாலகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் ஆலோசனை

ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலச் செயற்குழு கூட்டம் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலச் செயற்குழு கூட்டம் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுரேஷ்பாலன் வரவேற்றாா். சங்க நிா்வாகிகள் மருத்துவா்கள் கேசவன், செந்தில்குமாா், அருள்பிரகாஷ், ராஜசேகா், பகவத், முத்துகுமாா், கோசல்ராம் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்கு பின்னா், மாநில தலைவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலிலதாவால் அறிவிக்கப்பட்ட மருத்துவமனை பாதுகாப்பு படையை நடைமுறைப்படுத்த வேண்டும், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத எங்களது பல்வேறு கோரிக்கைகளை தோ்தலுக்கு பின்னா் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com