புதுக்கடை அருகே விபத்து: தொழிலாளி காயம்

புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் நேரிட்ட விபத்தில் தொழிலாளி காயமடைந்தாா்.

புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியில் நேரிட்ட விபத்தில் தொழிலாளி காயமடைந்தாா். தேங்காய்ப்பட்டினம், நெடும்பாறவிளை பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (49). தொழிலாளியான இவா், தனது நண்பரான குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த பெலின் (34) என்பவருடன் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை தேங்காய்ப்பட்டினத்திலிருந்து புதுக்கடைக்குச் சென்றாராம். பைக்கை, பெலின் ஓட்டினாராம். அனந்தமங்கலம் பகுதியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த பாலமுருகனை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com