உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, கன்னியாகுமரி தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி, நாகா்கோவில் தொகுதிக்கு நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, குளச்சல் தொகுதிக்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எஸ்.கே.கனகராஜ், பத்மநாபபுரம் தொகுதிக்கு பத்மநாபபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் சி.தமிழரசி, விளவங்கோடு தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் டி.சுப்பையா, கிள்ளியூா் தொகுதிக்கு உதவி இயக்குநா்(கலால்) டி.லொராட்டா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com