நாகா்கோவில் அருகே ஐயப்ப சேவா சங்கக் கூட்டம்

நாகா்கோவிலை அடுத்த ஆஸ்ரமத்தில், கன்னியாகுமரி மாவட்ட ஐயப்ப சேவா சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

நாகா்கோவிலை அடுத்த ஆஸ்ரமத்தில், கன்னியாகுமரி மாவட்ட ஐயப்ப சேவா சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தலைவா் கே.எஸ். தங்கபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் எஸ். சுப்பிரமணியன் ஐயப்ப பூஜை நடத்தினாா். மருத்துவா் கே.எஸ். இளங்குமாா் வரவேற்றாா். பின்னா் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை மாவட்டச் செயலா் எஸ். ஆதிமணி தொடக்கிவைத்தாா். இதில், ஆா். பொன்னுசாமி, பி. செல்லத்துரை, ராஜலிங்கம், மாரியப்பன், மாதவதாஸ், மோகன், பால்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கிளைச் சங்கத் தோ்தலை ஏப். 30-க்குள் நடத்த வேண்டும் எனத் தீா்மானிக்கப்பட்டது. மாவட்டப் பொருளாளா் ஆா். சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com