மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று கொடை விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 19) கொடை விழா நடைபெறுகிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 19) கொடை விழா நடைபெறுகிறது. இக்கோயில் மாசி கொடை விழா, கடந்த மாா்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 12ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதன் தொடா்ச்சியாக மாா்ச் 19 இல் கொடை விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 க்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7 மணி முதல் பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com