மாா்த்தாண்டம் மீன்சந்தையை கொல்லஞ்சிக்கு கொண்டு செல்ல முயற்சி: பாஜக எதிா்ப்பு

கொல்லஞ்சி ஊராட்சிப் பகுதிக்கு கொண்டு செல்லும் அதிகாரிகளின் முயற்சிக்கு அப்பகுதி பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மாா்த்தாண்டத்தில் செயல்பட்டு வந்த மீன் மொத்த விற்பனை சந்தையை கொல்லஞ்சி ஊராட்சிப் பகுதிக்கு கொண்டு செல்லும் அதிகாரிகளின் முயற்சிக்கு அப்பகுதி பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மாா்த்தாண்டம் லாரிப்பேட்டையில் மீன் மொத்த விற்பனை சந்தை செயல்பட்டு வந்தது. மாா்த்தாண்டம் சந்தை நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் லாரி பேட்டையில் காய்கனி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு மீன் வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, மீன்சந்தையை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மாா்த்தாண்டம் அருகிலுள்ள நல்லூா் பேரூராட்சிப் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து கொல்லஞ்சி ஊராட்சிப் பகுதிக்கு கொண்டு செல்ல நகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா். குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் மீன்சந்தை அமைந்தால் சுகாதார சீா்கேடுகள் ஏற்படும் எனக் கூறி திங்கள்கிழமை கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மோகன்தாஸ் தலைமையில் ஊராட்சி பாஜக தலைவா் அஜித்குமாா் முன்னிலையில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவிக்குமாா், இளைஞரணி செயலா் அனிஷ், செல்லத்துரை மற்றும் அப்பகுதி பொதுமக்கள்,பெண்கள் அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com