பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருவட்டாறு வட்டாட்சியரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருவட்டாறு வட்டாட்சியரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

அழகியமண்டபம் அருகே ரூ. 1.79 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் முறையான ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.79 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் முறையான ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.79 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் கே.எம். பாரதி தலைமையிலான குழுவினா் அழகியமண்டபம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த கேரளப் பதிவெண் கொண்ட ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ. 1,79,450 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. ஜீப்பில், கேரள மாநிலம் ஆலப்புழா கொல்லத்துக்கடவு பகுதியைச் சோ்ந்த நவாஸ் உள்ளிட்ட மூவா் இருந்தனா். அவா்கள் தங்களை மீன் வணிகா்கள் என்றும், திருநெல்வேலி மாவட்டம் உவரிக்கு மீன்கள் வாங்குவதற்காக பணத்துடன் செல்வதாகவும் கூறினா். ஆனால், பணத்துக்கான ஆவணங்களைக் காண்பிக்கவில்லை. இதையடுத்து, பறக்கும் படையினா் பணத்தைப் பறிமுதல் செய்து, திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் புரந்தரதாஸிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com