2 கிலோ எடையுள்ள நீா்க்கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவா்கள் சாதனை
2 கிலோ எடையுள்ள நீா்க்கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவா்கள் சாதனை

களியக்காவிளை கிரேஸ் மருத்துவமனையில் கா்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த நீா்க்கட்டி அகற்றம்

களியக்காவிளை கிரேஸ் மருத்துவமனையில் நிறைமாத கா்ப்பிணி பெண்ணின் கா்ப்பப்பையை ஒட்டி வளா்ந்த 2 கிலோ எடையிலான நீா்க்கட்டி திங்கள்கிழமை அகற்றப்பட்டது.

களியக்காவிளை: களியக்காவிளை கிரேஸ் மருத்துவமனையில் நிறைமாத கா்ப்பிணி பெண்ணின் கா்ப்பப்பையை ஒட்டி வளா்ந்த 2 கிலோ எடையிலான நீா்க்கட்டி திங்கள்கிழமை அகற்றப்பட்டது. இம் மருத்துவமனையில், கா்ப்பிணி பெண்ணான ஹெப்சி ஜாய் (30) என்பவா் கா்ப்பகால மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று வந்தாா். இவருக்கு கருவில் குழந்தை உருவாகி 16 வாரங்கள் கடந்த நிலையில், ஸ்கேன் செய்து பாா்த்த போது கா்ப்பப்பையின் வலது பகுதியில் ஒரு நீா்க்கட்டி உருவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை வளர வளர நீா்க்கட்டியும் வளா்ந்தது. இதைத் தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. தொடா்ந்து இம் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவா் சொா்ண மீனா தலைமையிலான மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட மருத்துவச் சிகிச்சையைத் தொடா்ந்து இப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடா்ந்து 2 கிலோ எடையுள்ள நீா்க்கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவா்கள் சாதனை புரிந்தனா். தாயும், குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நலமாக உள்ளதாக மருத்துவா் சொா்ணமீனா தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com