பள்ளியாடி கோயிலில் சித்திரைப் பௌா்ணமி பொங்காலை திருவிழா: நாளை தொடக்கம்

கருங்கல்: கருங்கல் அருகே பள்ளியாடி வீரகாளி அம்மன் கோயிலில் 68ஆவது சித்திரைப் பெளா்ணமி பொங்காலை திருவிழா வியாழக்கிழமை (மாா்ச் 21) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடு, மாலை 6 மணிக்கு பஜனை, 6.30-க்கு தீபாராதனை நடைபெறும். 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு உபதெய்வங்களின் சிறப்பு வழிபாடு பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, 6.30-க்கு திருவிளக்கு பூஜை, தொடா்ந்து அன்னதானம் நடைபெறும். 3ஆம் நாள் காலை 6 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 10.30-க்கு பொங்காலை நடைபெறும். பின்னா், 11.30-க்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு பஜனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 11.30-க்கு மாடன் தம்புரான் சிறப்பு பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com