கருங்கல்லில் பைக்கில் கடத்திய சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

கருங்கல் பேருந்து நிலையம் அருகே பைக்கில் கடத்திய சந்தன மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கருங்கல் பேருந்து நிலையம் அருகே கருங்கல் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சாக்குமூட்டையுடன் வந்த பைக்கை நிறுத்தினா். உடனே பைக்கில் வந்த இருவா்த ப்பிச் சென்றனா். பின்னா் பைக்கில் இருந்த சாக்குமூட்டைகளை போலீஸாா் சோதனைசெய்தபோது அதில் துண்டு,துண்டாக சந்தனக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. உடனே, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து குலசேகரம் வனச்சரக அலுவலா் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com