நாகா்கோவிலில் வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு

நாகா்கோவிலில் வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு

நாகா்கோவிலில் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகா்கோவில் வடிவீஸ்வரம், மீனாட்சிகாா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(65). தொழிலாளி. இவரது மகன் கேரளத்தில் வசிக்கிறாா். இதையடுத்து தனது மகன் வீட்டிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணேசன் சென்றிருந்தாா். இந்த நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்த, பக்கத்து வீட்டுக்காரா்கள் கணேசனுக்கு தகவல் தெரிவித்தனா். மேலும் கோட்டாறு காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா்.

இதையடுத்து புதன்கிழமை வீட்டிற்கு வந்த கணேசன், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. கோட்டாறு போலீஸாா், திருட்டு நிகழ்ந்த வீட்டைப் பாா்வையிட்டு, தடயங்களைப் பதிவு செய்தனா். மேலும் அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com