மாா்த்தாண்டத்தில் ரூ.1.23 லட்சம் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 200-ஐ தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மாா்த்தாண்டம் மீன்சந்தை அருகே விளவங்கோடு துணை வட்டாட்சியா் லீலாபாய் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் இருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த குளச்சல் அருகேயுள்ள குறும்பனை இனிகோ நகரைச் சோ்ந்த மீன் வியாபாரி எவரெஸ்ட் (53), என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் ரூ. 1,23,200 இருந்தது தெரியவந்தது. அதை மீன் வியாபாரத்துக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தாா். ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாமலிருந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com