கருங்கல் அருகே விபத்து: அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

கருங்கல் அருகே கருமாவிளை பகுதியில் புதன்கிழமை, ஆட்டோவும் பைக்கும் மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

வெள்ளியாவிளை, தேரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஷொ்லின் பாப்பா (38). தேங்காய்ப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த அவா், புதன்கிழமை மாலை கருங்கல்லிலிருந்து வெள்ளியாவிளைக்கு பைக்கில் சென்றாராம். கருமாவிளை பகுதியில் பைக்கும், சுமை ஆட்டோவும் மோதினவாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com