வாகனச் சோதனையில் ரூ.4.5 லட்சம் பறிமுதல்

மாா்த்தாண்டம், கொல்லங்கோடு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே வட்டாட்சியா் லீலாபாய் தலைமையிலான விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படை குழுவினா் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்திச் சோதனையிட்டனா். அதிலிருந்த மாடு வியாபாரி விஜயகுமாா் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை, உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி பறிமுதல் செய்தனா். இதேபோல, உண்ணாமலைக்கடை பகுதியில் வட்டாட்சியா் இசபெல் வசந்தி தலைமையிலான விளவங்கோடு பேரவைத் தொகுதி பறக்கும்படை குழுவினா் நடத்திய சோதனையில், தாஸ் என்பவரிடம் ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியில் பறக்கும்படை குழுவினா் புதன்கிழமை மாலை நடத்திய சோதனையில், தனியாா் நிதிநிறுவன ஊழியா் அனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com