கருங்கல் அருகே வீடு புகுந்து தீவைத்ததாக இளைஞா் மீது வழக்கு

கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கினாவிளையில் வீடு புகுந்து தீவைத்ததாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கினாவிளையில் வீடு புகுந்து தீவைத்ததாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. முள்ளங்கினாவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஆட்லின் ஜீனா (30). இவா் தனியாக வசித்து வருகிறாா். இவரது கணவா் அருள்பிரபு (35). கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆட்லின் ஜீனா ஆலயத்துக்குச் சென்றிருந்தாராம். அப்போது, அவரது வீட்டுக்குள் அருள்பிரபு புகுந்து இருக்கைகள் உள்பட பல்வேறு பொருள்களை எரித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com