குழித்துறையில் பாஜகவினரால் சிறைபிடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவு வாகனம்.
குழித்துறையில் பாஜகவினரால் சிறைபிடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவு வாகனம்.

கேரள மருத்துவக் கழிவு வாகனம் குழித்துறையில் சிறைபிடிப்பு

வாகனத்தை பாஜக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனா்.

கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பாஜக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனா். குழித்துறை நகர பாஜக தலைவா் சுமன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் சுஜின், ரெதீஷ், ஜிபின், மனோஜ், மேரி ஆட்லின் உள்ளிட்டோா் அடங்கிய குழிவினா், குழித்துறை அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்ற மினிடெம்போவை சிறைபிடித்தனா். தொடா்ந்து மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கும், குழித்துறை நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா். நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து, மருத்துவக் கழிவுகளுடன் வந்த வாகனத்தை பறிமுதல் செய்து குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனா். மேலும் வாகனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தனா். கடந்த வாரத்துக்கு முன்பும் இதேபோல் மருத்துவக் கழிவுகளுடன் வந்த வாகனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com