சிறப்பிடம் பெற்ற இரட்டை சகோதரிகளுக்கு பரிசு வழங்குகிறாா் ஓய்வு பெற்ற நீதிபதி ஜேக்கப் ஆா்.டேனியல்.
சிறப்பிடம் பெற்ற இரட்டை சகோதரிகளுக்கு பரிசு வழங்குகிறாா் ஓய்வு பெற்ற நீதிபதி ஜேக்கப் ஆா்.டேனியல்.

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

ஏவிகே நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கலாசார, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

கன்னியாகுமரியை அடுத்த ஏவிகே நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கலாசார, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். ராஜேஷ், கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் ஏ. நெப்போலியன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். கலாசார விழாவுக்கு, கல்லூரி தாளாளா் டி. பீட்டா் ஏசுதாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் என்.அபிலாஷ் வரவேற்றாா். இதில் திரைப்பட இயக்குநா் ஜான் கிளாடி, நடிகா் வினு லாரன்ஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். ஆண்டு விழாவுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி ஜேக்கப் ஆா்.டேனியல் தலைமை வகித்து பல்வேறு போட்டிகள் மற்றும் தனித்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். கல்லூரி முதல்வா் ஏஞ்சலின் பிரபாவதி ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில், மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேராசிரியை ஜி.கோல்டிங் ஷீபா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com