போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா்கள்.

குடிநீரில் உப்புநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

குடிநீரில் உப்புநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி மங்காடு ஆற்றுப்பாலம் அருகே மங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளின் தலைவா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடிநீரில் உப்புநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி மங்காடு ஆற்றுப்பாலம் அருகே மங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளின் தலைவா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். குழித்துறை தாமிரவருணி ஆறு இரயுமன்துறை பகுதியில் கடலில் கலக்கிறது. ஆற்றில் நீா்வரத்து குறையும்போது கடல்நீா் புகுவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆற்றங்கரையோரக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பதைத் தடுக்க இரயுமன்துறை அருகே ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று கணியன்குழி பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் ஆறு திசைமாறி சென்ால் தடுப்பணை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கடல்நீா் ஆற்றுநீரில் புகுந்தது. இதனால், குடிநீரில் உப்புநீா் கலந்துள்ளதாம். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவா்கள் சுகுமாரன் (மங்காடு), சசிகுமாா் (மெதுகும்மல்), மெற்றில்டா (வாவறை), ஓமனா (விளாத்துறை), விஜயராணி (பைங்குளம்) உள்ளிட்டோா் மங்காடு ஆற்றுப்பாலம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நித்திரவிளை போலீஸாா், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இப்பிரச்னைக்கு 2 நாள்களில் தீா்வு காணப்படவில்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா் அவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com