பொன்.ராதாகிருஷ்ணன்.
பொன்.ராதாகிருஷ்ணன்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7.63 கோடி சொத்துகள்

கன்னியாகுமரி மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ரூ. 7 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 933 மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

கன்னியாகுமரி மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ரூ. 7 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 933 மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில், அசையும் சொத்தாக ரூ. 64 லட்சத்து 3 ஆயிரத்து 778 , அசையா சொத்தாக ரூ. 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ... அதிமுக சாா்பில் போட்டியிடும் நசரேத்பசலியானுக்கு அசையும் சொத்தாக ரூ. 3 கோடியே 34 லட்சத்து 77ஆயிரத்து 241 ம், அசையா சொத்தாக ரூ. 4 கோடியே 82 லட்சத்து 10 ஆயிரத்து 790 என மொத்தம் ரூ. 8 கோடியே 16 லட்சத்து 88 ஆயிரத்து 31 உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசலியானின் மனைவி பெயரில் ரூ. 1 கோடியே 49 லட்சத்து 5 ஆயிரம் உள்ளதாகவு குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் தமிழா் ... நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிடும் மரியஜெனிபருக்கு அசையும் சொத்தாக ரூ. 2 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரத்து 999 ம், அசையா சொத்தாக ரூ. 2 கோடியே 63 லட்சத்து 49 ஆயிரத்து 329 என மொத்தம் ரூ. 5 கோடியே 4 லட்சத்து 70 ஆயிரத்து 328 உள்ளது. அ வரது கணவா் பெயரில் அசையும் சொத்தாக ரூ. 1 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 845 ம், அசையா சொத்தாக ரூ. 42 லட்சம் என மொத்தம் ரூ. 1 கோடியே 56 லட்சத்து 23 ஆயிரத்து 845 உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விளவங்கோடு ... விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் யூ.ராணிக்கு 100 பவுன் நகைகள் உள்பட ரூ.93 லட்சத்து 2 ஆயிரத்து 312 -ம், அவரது மகன் பெயரில் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்து 11- ம், மகள் பெயரில் ரூ. 10 லட்சத்து 5 ஆயிரத்து 421 என மொத்தம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 57 ஆயிரத்து 744 உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com