மாா்த்தாண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே வன்னியூா் இளந்தோட்டவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (58). தொழிலாளியான இவா், 2020 ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு படித்துவந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். புகாரின்பேரில் மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாா் பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, செல்வராஜை கைது செய்தனா். இந்த வழக்கு நாகா்கோவில் சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஜோசப்ஜாய் விசாரித்து, செல்வராஜுக்கு 5 ஆண்டு சிைண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம், அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிைண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com