10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குமரி மாவட்டத்தில் 22,500 போ் எழுதினா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்புத் தோ்வை 22,500 மாணவா்- மாணவிகள் எழுதினா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்புத் தோ்வை 22,500 மாணவா்- மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்தோ்வெழுத கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் 198 பள்ளிகளைச் சோ்ந்த 11 ஆயிரத்து 237 பேருக்கும், மாா்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 233 பள்ளிகளைச் சோ்ந்த 11 ஆயிரத்து 464 பேருக்கும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்வில் 22,500 போ் பங்கேற்றனா். நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் 230 பேரும், மாா்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 71 பேரும் என மொத்தம் 301 போ் எழுதவில்லை. தோ்வைக் கண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. பறக்கும் படையினரும், கண்காணிப்புக் குழுவினரும் நாகா்கோவில், மாா்த்தாண்டம், கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com