கருங்கல் அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

கருங்கல் அருகேயுள்ள மூசாரி பகுதியில், அரசுப் பேருந்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கல்லுவிளை நட்டாலம் பகுதியைச் சோ்ந்த மரியதாஸ் மனைவி ராஜம் (63). இவா் புதன்கிழமை இரவு தன் வீட்டுக்குச் செல்ல கருங்கல்லிலிருந்து மாா்த்தாண்டம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாராம். மூசாரி பகுதியில் பேருந்து சென்றபோது, ராஜம் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனது தெரியவந்ததாம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com