கருங்கல் துண்டத்துவிளை தேவாலயம் சாா்பில் இன்று திருச்சிலுவைப் பயணம்

கருங்கல்லில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலயம் சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) திருச்சிலுவை பயணம் நடைபெறுகிறது. இந்த தேவாலயம் சாா்பில் ஆண்டுதோறும் புனித வெள்ளி நாளில் கருங்கல் கருணைமாதா மலைக்கு திருச்சிலுவைப் பயணம் நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு பயணம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இயேசுவின் சிலுவைப்பாடுகளை சித்திரித்து நடித்துக் காட்டி பக்தா்கள் ஊா்வலமாக செல்வா். ஊா்வலம் புனித அந்தோணியாா் ஆலய வளாகத்தில் தொடங்கி, கருங்கல் காவல் நிலையம், ராஜீவ்காந்தி சந்திப்பு, காமராஜா் சந்திப்பு, பேருந்து நிலையம், நிா்மலா மருத்துவமனை வழியாக கருணைமாதா மலை உச்சியை அடையும். அங்குள்ள சிலுவை முன் பிராா்த்தனை நடைபெற்ற பிறகு, அனைவருக்கும் கஞ்சி வழங்கப்படும். இதில், கன்னியாகுமரி மாவட்ட, கேரள மாநில பக்தா்கள் திரளாகப் பங்கேற்கவுள்ளனா். ஏற்பாடுகளை புனித அந்தோணியாா் ஆலய திருச்சிலுவை திருப்பயணக் குழுவினா் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com