குமரியில் 22, விளவங்கோட்டில் 10 மனுக்கள் ஏற்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 22 வேட்புமனுக்களும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 10 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தோ்தலுக்கான வேட்புமனுக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 20 முதல் 27 வரை பெறப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வ.விஜய்வசந்த் எம்.பி., பாஜகவின் சாா்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவின் சாா்பில் பசலியான் நசரேத், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மரியஜெனிபா், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 33 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாற்று வேட்பாளா்கள் உள்பட 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இடைத்தோ்தல்: விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலுக்கான வேட்புமனுக்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் 18 போ் தாக்கல் செய்திருந்தனா். இதில் பாஜக வேட்பாளா் நந்தினி, அதிமுக வேட்பாளா் யூ.ராணி, காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெமினி உள்பட 10 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மாற்று வேட்பாளா்கள் உள்பட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற மாா்ச் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு சின்னங்களுடன் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com