மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன பெண் ஊழியா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன பெண் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். களியக்காவிளை அருகே பளுகல், கருமானூா் பகுதியைச் சோ்ந்தவா் அபிலாஷ், எலக்ட்ரீஷியன்.

இவரது மனைவி சித்ராதேவி (36), தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் கடன் தொல்லை காரணமாக சில நாள்களாக மன வேதனையில் இருந்தாராம். புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடினா். அப்போது, மாா்த்தாண்டம் காவல் சரகம், மருதங்கோடு பகுதியில் அண்மைக்காலமாக பூட்டிக் கிடந்த அவரது பெற்றோா் வீட்டில் அவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம். இதுகுறித்து அபிலாஷ் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com