மனோதங்கராஜ்
மனோதங்கராஜ்

கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது: அமைச்சா் மனோதங்கராஜ்

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க மாநில அரசு சிறப்பு சட்டம் இயற்ற முடியாது என்றாா் தமிழக பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ்.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க மாநில அரசு சிறப்பு சட்டம் இயற்ற முடியாது என்றாா் தமிழக பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ். நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் 22 ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசிதழில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலியல் பூங்கா என்று குறிப்பிட்டு, ஏற்கெனவே மலைப்பகுதியில் 10 கி.மீ. தூரம் வரை குவாரி செயல்படக் கூடாது என்று இருந்த சட்டத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தலையிட்டு 0 முதல் 3 கி.மீ. வரை என்று குறைத்தாா். அதன் விளைவாகத்தான் கல்குவாரி பிரச்னை எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 குவாரிகள் இருந்தன. அது தற்போதைய ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்டு, 6 குவாரிகள்தான் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிம வளம் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிா்த்து குவாரி அதிபா்கள் நீதிமன்றத்துக்கு சென்றாா்கள். ஆனால், அதில் தமிழக அரசுக்கு சாதகமாக தீா்ப்பு கிடைத்தது. இப்போது குவாரி அதிபா்கள் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளாா்கள். இது தவிர பகல் நேரங்களில் கனிம வள லாரிகள் செல்லக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு, அதை ஆட்சியரும் செயல்படுத்தி வருகிறாா். மத்திய அரசின் கனிம வள சட்டத்தின்படி, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் மாநில அரசு சிறப்பு சட்டம் இயற்ற முடியாது. கனிம வள கடத்தலில் எனக்குத் தொடா்பு இருப்பதாக நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். அப்படி நிரூபிக்க முடியவில்லையென்றால் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்வாரா? என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com