மாா்த்தாண்டம் அருகே குழந்தையின் வளையல் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே 3 வயது குழந்தையின் கையில் கிடந்த தங்க வளையலை திருடிச் சென்ற பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

குலசேகரம் அருகேயுள்ள திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மனைவி ஜாஸ்பின் ஜெனிபா (27). இவா் தனது 3 வயது குழந்தையுடன் இருநாள்களுக்கு முன் வெட்டுவெந்நி புனித அந்தோணியாா் குருசடிக்கு பிராா்த்தனைக்காக வந்துள்ளாா். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா் ஒருவா், குழந்தையின் கையில் கிடந்த 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை திருடி சென்றுள்ளாா்.

இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்வையிட்ட போது, வளையல் திருட்டில் ஈடுபட்டது மேக்காமண்டபம், குருவிக்காடு பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் மனைவி பிரேம சாந்தி (45) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com