பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் 
இசக்கியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி அருகேயுள்ள பெருமாள்புரம் அருள்மிகு வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் கொடைவிழாவின் 9ஆம் நாளான வியாழக்கிழமை இரவு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் 11 நாள் திருவிழா கடந்த ஏப். 24ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு பூஜை, சமபந்தி விருந்து, தீபாராதனை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

9ஆம் நாளான வியாழக்கிழமை இரவு 1,008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு பூஜை, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

10ஆம் நாளான வெள்ளிக்கிழமை (மே 3) அதிகாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12.45-க்கு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 12 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, தொடா்ந்து வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் பரிவார தெய்வங்களுடன் அருள்நிலையில் கோயில் வலம் வருதல் ஆகியவை நடைபெறும்.

நிறைவு நாளான சனிக்கிழமை (மே 4) அதிகாலை 2.30 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை, 3.30 மணிக்கு இசக்கியம்மனுக்கு பூஜை, காலை 5.30 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவற்றுடன் விழா நிறைவடையும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com