குமரி பகவதியம்மன் கோயில் 
வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு

கன்னியாகுமரி, மே 3: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக பெருந்திருவிழா மே 14-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால் கோள் வைபவம் கோயில் வளாகத்தில் குமரி மாவட்ட திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா் துளசிதரன் நாயா், கோயில் மேலாளா் ஆனந்த், கணக்காளா் கண்ணதாசன், மாநில திமுக வா்த்தகா் அணி இணைச் செயலா் என்.தாமரைபாரதி, திமுக நிா்வாகிகள் ஆா்.டி.ராஜா, எஸ்.வைகுண்டபெருமாள், தாமரை பிரதாப், கன்னியாகுமரி பேரூராட்சி துணைத் தலைவா் ஜெனஸ்மைக்கேல், அதிமுக நிா்வாகி பி.பகவதியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com