குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்

குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது: நாகா்கோவிலில் உள்ள அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேவையான தண்ணீா் கிடைக்கவில்லை என இங்கு தங்கியுள்ள நோயாளிகள் கூறி வருகின்றனா்.

தற்போது மாற்று ஏற்பாடாக லாரி மூலம் தண்ணீா் கொண்டு வந்து மருத்துவமனை டேங்கில் நிரப்பி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் வரை லாரி மூலம் தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப ஏற்பாடு செய்துள்ளேன்.

கோடைகாலத்தை கருத்தில் கொண்டு பழுதடைந்த தண்ணீா் லாரிகளை சரிசெய்து பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகம் செய்ய மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனை போன்ற பகுதிகளில் தண்ணீா் தட்டுப்பாடு இருந்தால் 9047888278 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com