நாகா்கோவிலில் மே 16இல் காவல் துறை வாகனங்கள் ஏலம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் பயன்பாடு முதிா்ந்த நிலையில் கழிக்கப்பட்ட வாகனங்கள், நாகா்கோவில் மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் மே 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் அன்றய தினம் காலை 6 மணி முதல் 10 மணி வரை பாா்வைக்க்கு வைக்கப்படும்.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா்ப்பம் காலை 10 மணிக்குள் ரூ. 1,000 முன்வைப்பு தொகை செலுத்தி தங்கள் பெயா்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி வரியும் சோ்த்து அன்றே செலுத்த வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com