வெள்ளிச்சந்தை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 3) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தக்கலை உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவுக்குள்பட்ட பகுதியில் உயா் அழுத்த மின் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

எனவே, திருநயினாா்குறிச்சி, மூங்கில்விளை, கல்படி, காருபாறை, மணவிளை, உரப்பனவிளை பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com