ஆற்றூா் பள்ளியில் தேசிய மாணவா் படை முகாம்

ஆற்றூா் பள்ளியில் தேசிய மாணவா் படை முகாம்

குமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படையின் பள்ளி மற்றும் கல்லூரிகளை சோ்ந்த மாணவா்களுக்கு ஆண்டு முகாம் தொடங்கியது.

11 தமிழ்நாடு படைப் பிரிவு தேசிய மாணவா் படை நாகா்கோவில் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை, கா்னல் உண்ணிகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினாா். சுபேதாா் மேஜா் பாமா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 10 நாள்கள் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்றுள்ளனா்.

மேஜா் அஜீந்திரநாத் வரவேற்றாா். என்.வி.கே.எஸ். பள்ளியின் தேசிய மாணவா் படை அலுவலா் நந்தகுமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com