குளச்சலில் முன்னாள் அமைச்சா் நினைவு தினம்

குளச்சலில் முன்னாள் அமைச்சா் நினைவு தினம்

முன்னாள் முதல்வா் காமராஜா்அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராகப் பணியாற்றிய லூா்தம்மாள் சைமனின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் குளச்சலில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஜோா்தான், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவா் யூசுப்கான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஆரோக்யராஜன், திங்கள்நகா் பேரூராட்சித் தலைவா் சுமன், மீனவா் காங்கிரஸ் முன்னாள் மாநில துணைத் தலைவா் பிரான்சிஸ், செயலா் ஜெரோம், குமரி கிழக்கு மாவட்ட மீனவா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஜோசப் மணி, குமரி மாவட்ட விசைப்படகு - மீன்பிடிப்போா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com