திருவட்டாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருவட்டாறு பகுதியில் திங்கள்கிழமை (மே 6) மின் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவட்டாறு பகுதிகளில் மின் பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துதல், அவசர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அருமனை பீடா் பகுதிகளான திருவரம்பு, அம்பாங்காலை, பாடகசேரி, சாத்திரவிளை, கல்லாம்பொற்றை சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 முதல் நண்பகல் 12 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோன்று, சுருளகோடு பீடா் பகுதிகளான வோ்க்கிளம்பி ஏ.பி. சுவிட்சு முதல் மாறாங்கோணம், கல்லங்குழி, வாழவிளை, புலவன்விளை, மாா்த்தாண்டன்விளை, ஒட்டலிவிளை சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 9) காலை 10 முதல் நண்பகல் 12 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com