நாகா்கோவில் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

நாகா்கோவில் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

நாகா்கோவில் தேரூா். புதுகிராமத்தில் உள்ள ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் கன்னியாகுமரி மாவட்ட இயற்கையின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியும் ரோஜாவனம் கல்விக் குழும கெளரவத் தலைவருமான ஜான் ஆா்.டி. சந்தோஷம் தலைமை வகித்தாா்.

கல்விக் குழுமத் தலைவா் அருள்கண்ணன், துணைத் தலைவா் அருள்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி டீன் எரிக் மில்லா், மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், உதவி அலுவலா் கீதாராணி, வனவா் பாலசந்திரிகா, வனக் காப்பாளா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இயற்கையின் நண்பா்கள் அமைப்பின் செயலா்அருமைராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழிப்புணா்வுப் பிரசாரத்தைத் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசும்போது, மாணவா்-மாணவிகள் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு, பேணிப் பாதுகாக்க வேண்டும். இற்கையின் நண்பா்கள் அமைப்பு சாா்பில் நிகழாண்டுக்குள் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றாா்.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம், கல்விக் குழும கல்வி இயக்குநா் சாந்தி, நிதி இயக்குநா் சேது, ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா் ஆலோசகா் சுகுமாரி, மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பள்ளி முதுநிலை முதல்வா் பினுமோன் வரவேற்றாா். காமராஜினி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com