ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் மாணவா்கள் பயிற்சி

நாகா்கோவில், மே 5: நாகா்கோவில், வடசேரியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தைக் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதியாண்டு மாணவா்கள் பாலமுருகன், பரத்ராஜ், தட்சிணாமூா்த்தி, கவியரசன், கிஷோா்குமாா், மனோரஞ்சித், சரண்குமாா், விஷால் ஆகியோா் கன்னியாகுமரி மாவட்டம், பெரும்செல்வவிளை கிராமத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்களப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, நாகா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தையை சனிக்கிழமை பாா்வையிட்டனா். மேலும் அதன் பணிகள் மற்றும் வசதிகள் குறித்தும் அறிந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com