நாகா்கோவிலில் விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவிலில் விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவில், மே 5: மத்தியஅரசின் சமூக நீதி -அதிகாரமளித்தல் துறை, தமிழக அரசின் குழந்தைகள் நலன் -

சிறப்பு சேவைகள் துறை ஆகியவை இணைந்து ‘போதையில்லா பாரதம்’ என்ற விழிப்புணா்வுப் பேரணியை நாகா்கோவிலில் சனிக்கிழமை நடத்தின.

இதையொட்டி, கோட்டாறு அரசுஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் கிளாரஸ் டேவி தலைமை வகித்து விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்தாா். இதில் மாணவா்கள் மதுபோதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். தொடா்ந்து, விழிப்புணா்வு கலைக்குழு தலைவா் கலைமாமணி பழனியாபிள்ளை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டாா்.

இந்த விழிப்புணா்வு கலைக்குழுவினா் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் சென்று போதைக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com